ஆப்சன் வர்த்தகம் – பகுதி 3

Option Trading பகுதி-3 ( முந்தைய பதிவுகளை பார்க்க
https://www.facebook.com/groups/107208076645033 செல்லுங்கள் )
 
முந்தைய பதிவில் Call, Put வகைகளையும் அதன் தேவையையும் பார்த்தோம். அதை இன்னும் தெரிந்துகொள்ள In the Money, At the Money , Out of the Money என்றால் என்ன என்று பார்ப்போம்.
 
In the Money என்பதை உங்கள் வங்கியில் இருக்கும் பணம்.
At the Money என்பதை உங்கள் கையில் இருக்கும் பணம்
Out of the Money என்பதை உங்கள் அடுத்தமாத வருமானம் என்று கொள்க.
 
மீண்டும் ரியல்எஸ்டேட் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். நிலம் விலை ஏறப்போகிறது என்றால் Call எனப்படும் நிலம் வாங்கும் உரிமையை வாங்குவோம்.
 
நிலத்தின் விலை இன்று 10000 ரூபாய். இதை At the Money என்க. இன்றைய விலைக்கு கீழே இருக்கும் Strike Price 9900, 9800, 9700 போன்ற Contractகள் எல்லாம் Safe. இவை In the Moneyல் இருக்கிறது. நாளை ஏறும் என்று நம்பப்படும் 10100,10200,10300 போன்ற Contractகள் எல்லாம் out of the money. அதாவது கற்பனையில் இருக்கிறது. அவை நாளை ஏறும்போது அந்த விலைகளை தொட்டால் At the Money, அதையும் தாண்டி ஏறும்போது In the Moneyக்குள் வந்துவிடும். Contract Period முடிவதற்குள் இவை நடந்தால் தான் மேற்சொன்னது நிஜமாகும். தொடாவிட்டால் அது உத்தரவாதமில்லாத Out of the Moneyல் தான் இருக்கும். அந்த நிலையிலேயே Contract முடிந்தால் தான் Call ஸீரோவாகும். ஒருவேளை உங்கள் எதிர்பார்ப்பு நிஜமாகி நிலத்தின் விலை ஏறி நீங்கள் வாங்கிய 10100தாண்டிவிட்டதால் இவை Safe Zone என்ற In the Moneyக்குள் வந்துவிடுவதால் இவை Contract முடியும்போது Zero ஆவதில்லை.
 
இப்போது நிலத்தின் விலை இறங்கப்போகிறது என்றால் Putஎன்ற விற்கும் உரிமையை வாங்குவோம்.
 
Put ஐ பொறுத்தவரையில் நடப்பு விலைக்கு கீழே இருக்கும் 9900, 9800, 9700 Contractகள் எல்லாம் Out of the Money. ஏனென்றால் அவை நாளை இறங்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இருப்பவை. 10100,10200,10300 போன்ற Contractகள் எல்லாம் In the Moneyக்குள் வந்துவிடும் என்பதால் இவை Safe Zoneல் இருக்கிறது. நாளை நாம் நினைத்தது போலவே விலை இறங்குகிறது. 9900 ஐ தாண்டி கீழே இறங்கும்போது Contract நிஜமாகி In the Moneyக்குள் வந்துவிடும். 9800 சென்று இன்னும் கீழே சென்று கொண்டிருந்தால் 9900 என்ற Contractன் விலை இன்னும் ஏறும். ஏனென்றால் அதற்கான நேரம் குறைவு. அதனால் புதியவர்கள் பெரும்பாலும் In the Moneyல் செல்வதே நல்லது. ஒருவேளை சந்தை எதிர்திசையில் சென்றால் At the Money வரும்போது வெளியில் வந்துவிடலாம். சின்ன சின்ன லாபங்கள் பார்க்கலாம்.
 
சந்தையை பற்றி நன்கு அறிந்தவர்கள் ரிஸ்க் எடுக்க தயங்காதவர்கள் Out of the Moneyல் நுழைவார்கள். அவர்கள் கணித்தபடியே சென்றால் நிச்சயம் பணம் அள்ளுவார்கள். ஒருவேளை சந்தை எதிர்திசையில் சென்று Out of the Money என்ற கற்பனை கடைசிவரை நிஜமாகாவிட்டால் உங்கள் முதலீடு Zeroவாகிவிடும்.
 
முந்தைய பதிவை ஒருமுறை படித்துவிட்டு இதை படித்தால் தெளிவாக புரியும் என்று நினைக்கிறேன். புரியாதவர்கள் பதிவில் கமென்ட்டில் கேளுங்கள். சந்தையின் போக்கை எப்படி இந்த விலைஏற்றத்தை வைத்தே கணிப்பது, Delta, Gamma, Theta, Vega, Rho என்றால் என்ன என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *