ஆப்சன் வர்த்தம் – பகுதி 1

Futures and Options என்பது இன்று பங்கு சந்தையில் பெருவாரியாக பேசப்பட்டாலும் இதன் ஆரம்பம் கிரேக்கர்கள் காலத்தில் இருந்து தொடங்குகிறது. தாலஸ் என்ற கணித அறிஞர் தான் Option சந்தையின் முதல் முதலீட்டாளர். ஆலிவ் பழங்களின் விளைச்சல் குறைந்திருக்கும் குளிர்காலத்தில் ஆலிவ் ஆலைகளை பயன்படுத்தும் உரிமையை வாங்கிவைத்துக்கொள்வார். வேனிற்காலத்தில் விளைச்சல் பெருகும் போது அதை எண்ணையாக்க ஆலிவ் ஆலைகளை தான் தேடிவர வேண்டும். அப்போது அதை நல்ல விலைக்கு அரைக்கும் கூலிக்கு விடுவார். அதே போல் பிற ஊர்களில் இவர் வாங்கி வைத்த ஆலிவ் ஆலைகளை பயன்படுத்தும் உரிமையை நல்ல விலைக்கு விடுவார். கவனிக்க வேண்டிய விஷயம் எந்த ஆலையும் இவருக்கு சொந்தமில்லை. சீசன் இல்லாத சமயம் பார்த்து ஆலைக்கு சொந்தக்காரர்களிடம் பேசி ஒரு வருடத்திற்கு பயன்படுத்தும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சீசன் வரும்போது சந்தையில் டிமாண்ட் உருவாக்கி நல்ல காசு பார்த்துவிடுகிறார். இந்தக் கதையில் இருந்து தான் இது தொடங்குகிறது.

இன்னொரு உதாரணத்தை பார்த்துவிடலாம். நீங்கள் ஒரு இடத்தை வாங்க முடிவு செய்துவிட்டீர்கள். அந்த இடத்தின் முழுத்தொகையையும் திரட்டி செலுத்த அல்லது ஒட்டுமொத்த விற்பனையும் நடக்க நாட்களாகும். அந்த இடம் உங்களுக்கு தான் என்று உறுதி செய்ய ஒரு டோக்கன் அட்வான்ஸ் போடுவீர்கள். இதை Right to Buy அல்லது Sell என்பார்கள். இதை தான் options என்பார்கள். அதற்கு ஒரு காலக்கெடுவும் உண்டு. அதன் பெயர் Contract Expiry. இப்போது இடம் உங்களுக்கு சொந்தமில்லை. ஆனால் இடத்தை வாங்கும் உரிமை உங்களுக்கு தான் இருக்கிறது. வேறொருவர் அந்த இடத்தை வாங்க விரும்பினால் இடத்தின் சொந்தக்காரர் உங்களை கைகாட்டுவார். உங்களிடம் வந்து அவர் நீங்கள் கொடுத்த டோக்கன் அட்வான்ஸை விட அதிகம் கொடுத்தால் தான் நீங்கள் விட்டுக்கொடுப்பீர்கள்.

Right to Buy என்பதை தான் Call Option என்பார்கள். Right to Sell என்பதை Put Option என்பார்கள். Right to Sellக்கு ஒரு உதாரணம் ஒரு மாந்தோப்பில் விளையும் மாம்பழங்களை விற்கும் உரிமையை ஒருவருக்கு கொடுப்பது. இதெல்லாம் நடைமுறை உதாரணங்கள். இதை அப்படியே பங்குசந்தையில் பொருத்தி பார்த்தால் அது தான் Options வணிகம்.

ஒரு சதுர அடி இடத்தை யாரும் வாங்க மாட்டார்கள். அதே போல ஒரு மாமரத்தின் விளைச்சலை விற்கும் உரிமையை கொடுக்கமாட்டார்கள் இல்லையா.. அதனால் இங்கேயும் ஒரு குறைந்தபட்ச விற்பனை அளவு உண்டு. அதை Lot Size என்பார்கள். நூறு பங்குகள், ஆயிரம் பங்குகள் என்று பங்குகளின் தனிப்பட்ட மதிப்பிற்கேற்ப இந்த Lot size இருக்கும்.

அன்றைய தேதிக்கு சந்தையில் செல்லும் மதிப்பை Strike Price என்பார்கள்.

பங்கு சந்தையில் இருவகையான Options உண்டு.
Stock Options
Index Options

பங்கு சந்தையில் உள்ள பங்குகளை வாங்கும் / விற்கும் உரிமையை வாங்குவது Stock Options. உதாரணத்திற்கு Infosys Stock Option, Reliance Stock Option, ..

பங்கு சந்தையின் புள்ளிகளை வாங்கும் / விற்கும் உரிமையை வாங்குவது Index Option. உதாரணத்திற்கு Banknifty, Nifty, etc. இந்த புள்ளிகள் ஒரு கணக்கு தான். தலைசிறந்த முதல் 50 நிறுவன பங்குகளின் சராசரி தான் Nifty. அதே வங்கிகளின் பங்குகள் சராசரி தான் Banknifty. இதை நிர்வகிப்பது NSE Exchange தான்.

இது வெறும் அடிப்படை பாடம் தான். இதற்கு அடுத்து தான் மண்டைகாய வைக்கும் Long Call, Long Put, Short Call, Short Put போன்ற முக்கிய விசயங்களை நாளைக்கு பார்ப்போம். அதற்கு முன்பு இரண்டு வார்த்தைகளை புரிந்துகொள்வோம். பங்குசந்தையில் பங்கு ஏறினால் அது Bullish Market, இறங்கினால் Bearish Market என்பதை அறிக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *