ஆப்சன் வர்த்தகம் – பகுதி 2

Option Tradingல் அடிப்படையை போன கட்டுரையில் எழுதியிருந்தேன். Option Trading யார் செய்யலாம் ஏன் செய்யலாம்? குறைவான முதலீடு இருக்கிறது. ஆனால் பங்குவர்த்தகத்தில் ஆர்வம் இருக்கிறது. அதன் போக்கை என்னால் அனுமானிக்க முடிகிறது என்று நினைப்பவர்கள் இதை செய்யலாம். இது Betting-ஆ என்றால் ஆம் இது பந்தயம் தான். ஆனால் லாட்டரி போன்ற அதிர்ஷ்ட பந்தயம் அல்ல. பொதுவாக அதிர்ஷ்ட பந்தயங்களில் அதிக வழிகள் இருக்கும் ஆனால் வெற்றிக்காண வாய்ப்பு யாராவது ஒருவருக்கு தான் இருக்கும் இதை Random Processக்கு உதாரணமாக சொல்லலாம். இதில் வெற்றிக்கான வாய்ப்பை இதில் கணிக்க முடியாது.

Option Tradingல் இரண்டே வழிகள் தான் ஏறும் அல்லது இறங்கும். ஆகவே வெற்றிக்கான வாய்ப்பு 50% தோல்விக்கான வாய்ப்பு 50% இருக்கும். இதை Probabilityக்கு உதாரணமாக சொல்வார்கள். இதில் வெற்றிக்காண வாய்ப்பை கணிக்கமுடியும். இயல்பாகவே 50% வெற்றி வாய்ப்பு இருக்கிறது. கூடவே சந்தையின் சூழல், நிறுவனத்தின் பொருள் அல்லது சேவைக்கான டிமாண்ட், போட்டி, அரசாங்க விதிகள், கடந்தகால வளர்ச்சிவிகிதம் எல்லாவற்றையும் பார்த்தால் இன்னும் வெற்றிக்கான வாய்ப்பை துல்லியமாக கணிக்கலாம்.

Option Tradingல் Call மற்றும் Put என்று இரண்டு பார்த்தோம். அதாவது வாங்குவதற்கான உரிமையை Call என்றும் விற்பதற்கான உரிமையை Put என்றும் பார்த்தோம். அதென்ன Long call, long put, short call, short put?

ஒரு Call Optionஐ வாங்கினால் அதன் பெயர் Long Call. ஒரு புரிதலுக்காக ரியல்எஸ்டேட் ஐ உதாரணம் எடுத்துக்கொள்வோம். அதை பங்குசந்தையுடன் பிறகு பொருத்திப்பாருங்கள். அதாவது நிலத்தின் விலை ஏறும் என்று நினைத்து Call(நிலத்தை வாங்கும் உரிமையை) ஐ வாங்கினால் அது Long Call. அதே Call Optionஐ விற்றால் அதன் பெயர் Short Call. அதாவது நிலத்தின் விலை வீழும் என்கிற போது அதை விற்பனை செய்துவிட்டு வெளியேறுவார். அல்லது அவரது விலை கிடைத்தாலும் விற்றுவிட்டு வெளியேறுவார் இல்லையா அதை Short Call என்பார்கள்.

நிலத்தின் விலை இறங்கும் என்று கணித்தவர் Put Optionஐ ( அதாவது விற்கும் உரிமையை) வாங்குவார். அதன் பெயர் long put. அவரது விலை வந்துவிட்டாலோ அல்லது நிலத்தின் விலை இறங்காமல் ஏறினாலோ அதை விற்று விட்டு வெளியேறுவார். அதை Short Put என்பார்கள். இதை writing என்றும் இதை செய்பவர் writer என்றும் அழைப்பார்கள்.

இந்த Contract பல விலைகளில் கிடைக்கும். இப்போது சென்று கொண்டிருக்கும் விலையை Strike Price என்பார்கள். ஒரு நிலத்தின் விலை 10,000க்கு இப்போது போய்க்கொண்டிருக்கிறது. நிலத்தின் விலை ஏறிக்கொண்டே சென்றால் அடுத்தமாதம் இது 10100 ஐ தொடும், அதற்கடுத்த மாதம் 10,200ஐ தொடும், அதற்கடுத்த மாதம் 10,300. அதாவது காலத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அதன் மதிப்பு ஏறும் . அதே போல இறங்கிக்கொண்டே சென்றால் 9900 முதல் மாதம், இரண்டாம் மாதம் 9800, மூன்றாம் மாதம் 9700க்கு செல்லும். இந்த ஆறு விலைகளைத்தான் Contract என்கிறார்கள். இந்த Contractஐ தான் வாங்கவோ விற்கவோ செய்வீர்கள். இதில் வெறும் வாங்கும் உரிமையை அல்லது விற்கும் உரிமையை தான் வாங்குகிறீர்கள். ரியல்எஸ்டேட் பாணியில் சொல்வதென்றால் token advance. நிலத்தையே அல்ல என்பதை மீண்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ஆகவே இந்த Contract விலை குறைவாகத்தான் இருக்கும். ஆகவே குறைவான முதலீடு இருந்தால் போதும் Option Trading செய்ய முடியும். அதே போல நீங்கள் வாங்கிய Option எதிர்திசையில் சென்றால் நீங்கள் சரியான நேரத்தில் வெளியில் வராமல் தூங்கிவிட்டால் அந்த குறிப்பிட்ட கால அளவு( Contract Period)முடியும் போது 0 வாகிவிடும். நீங்கள் எதிர்பார்த்த திசையில் சென்று, உங்கள் Contract விலையை அடைந்தால் அல்லது அதற்கு மேல் சென்றால் என்ன நடக்கும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அங்கே ஒரு முக்கியமான விஷயத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவை தான் In the money, At the money, Out of the money. இதை புரிந்துகொண்டால் மட்டுமே வெற்றியுடன் வெளியில் வருவது புரியும். மகாபாரதப் போரில் சக்கரவியூகத்தை உடைத்து உள்ளே செல்லத் தெரிந்த அபிமன்யுவிற்கு வெளியில் வரத் தெரியவில்லை. காரணம் அர்ச்சுனன் இதை சுபத்திரைக்கு சொல்லும்போது கருவில் கேட்டுக்கொண்டிருந்த அபிமன்யுவால் தாய் பாதியில் தூங்கிவிட்டதால் வெளியில் வரும் வித்தையை கற்க முடியவில்லை. Option Tradingன் அடிப்படையை முழுமையாக கற்றால் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும். தொடர்ந்து கற்போம். அதில் தான் வெற்றி அடங்கி இருக்கிறது.

முந்தைய கட்டுரையை படிக்கவும், இது தொடர்பான பிற பதிவுகளை தொடரவும் இந்த குருப்பில் சென்று பாருங்கள்.

https://www.facebook.com/groups/107208076645033/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *