தொடர்ந்து குறைந்துவரும் பெட்ரோல் டீசல் விலை!. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் மக்களுக்கு தேவையயன அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது குறைய தொடங்கியது.

இந்தநிலையில், இன்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 16 பைசா குறைந்து ரூ. 81.08 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 16 பைசா குறைந்து ரூ. 76.89 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *