இந்தியா வளராது… மோடியின் பண மதிப்பு இழப்பு தான் காரணம், சொல்வது Moody’s.!

 

அமெரிக்காவில் 1909-ம் ஆண்டில் இருந்து இயங்கும் மதிப்பீட்டு நிறுவனம். ஒஸாமா பின் லேடன் தகர்த்த உலக வர்த்தக மையம் தான் இந்த நிறுவனத்தின் தலைமையகம். இந்த நிறுவன கணிப்புகளுக்கு உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் கணிப்புகள் அளவுக்கு மதிப்பு உண்டு.

2018-ம் ஆண்டின் முதற் பாதியில் ஜூன் வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதத்தை எட்டி இருக்கிறது. இனி மீதமுள்ள ஆறு மாதங்களோடு ஒட்டு மொத்த 2019-ம் ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதமாகவே இருக்கும் என கணித்திருக்கிறது. 2020-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7.4 சதவீதமாக உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

டிமானிட்டைசேஷனில் இருந்து மீளாத இந்தியச் சந்தைகள், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு, இந்திய அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் அதிகரித்திருக்கும் வாராக் கடன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என்றழைக்கப்படும் (NBFC) நிறுவனங்களில் கூட கடன் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்… போன்றவைகள் தான் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான முக்கியத் தடை கற்கலாக இருப்பதாக சொல்கிறது Moody’s.

ஆனாலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் உள்நாட்டின் நுகர்வு அதிகரிக்கவில்லை, மக்களின் செலவழிக்கும் திறன் குறைந்து இருப்பது, வெளிநாடுகளில் இருந்து அல்லது உள் நாட்டிலேயே முதலீடுகள் உயரவில்லை, அதோடு எந்த ஒரு பொருளாதார ஊக்குவிப்புகளும் முன்னேற்ற மடையவில்லை என Moody’s சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த நேரத்தில் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளது, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை காரணமாக பணப் புழக்கம் குறைந்துள்ளது, போன்றவைகளால்… 2019-ம் ஆண்டும் மத்திய ரிசர்வ் வங்கி இதே நிலையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் உள்நாட்டு நுகர்வு வரும் ஆண்டும் குறைவாகவே இருக்கும் என Moody’s குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசு வங்கிகளில் 11 வங்கிகளின் நிதி நிலையை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது. வங்கிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் எல்லாம் நீண்ட கால செயல்திட்டம். இதை செய்து முடிக்க குறைந்தது ஐந்து வருடங்களாவது தேவைப்படும். இதனால் வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் பணப் புழக்கம் குறைந்து அது பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும். ஐஎல்அண்ட்எஃப்எஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் நிதி நெருக்கடி இதற்கு ஒரு உதாரணம் என சுட்டிக் காட்டி இருக்கிறதது Moody’s.

ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கையோடு செபி கட்டுப்பாடு மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு மூலம் தொடர்ந்து செயல்பட்டால் தான் கடன் வசூலாகும், குறுகிய காலத்தில் நிதி துறையை ஸ்திரப்படுத்த முடியும். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வங்கிகளில் கடன் வாங்குகிறவர்களின் எண்ணிக்கையே மிக மெதுவாகவே வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதையும் Moody’s கவனித்திருக்கிறது.

ஒட்டு மொத்தத்தில் இந்தியா தற்போதைக்கு வளராது, 2020-ல் வேண்டுமானால் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பலாம். அது வரை இந்திய பொருளாதாரத்துக்கு தேக்க நிலை அல்லது இறக்கம் தான் என moody’s தெரிவித்திருக்கிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *